கோவை டிச:15
கோவை மாவட்டம்,ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மாசாணி அம்மன் சயன கோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை உள்ளது.
மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது 14 ஆண்டுக்கு பின்னர் 2024 டிசம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் புனரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6 ம்தேதி மங்கள வாத்யம், வேதபாரண்யம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. 7ம்தேதி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. 8ம் தேதி வாஸ்துசாந்தி நடைபெற்றது. 9ம் தேதி யாகசாலை அலங்காரம், முதற்கால யாக பூஜை நடைபெற்றது. 10ம்தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. 11ம் தேதி நான்காம் கால யாக பூஜை, ஐந்தாம் கால யாக பூஜை நடைபெற்றது. 12ம் தேதி வியாழக்கிழமை 7.35 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 9.15 மணி க்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், 9.30 மணிக்கு மாசாணியம்மன் மூலாய கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்றனர். டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. 1100 போலீசார், 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதல்வர் மருமகன் சபரீசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் செந்தில் பாலாஜி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, முன்னாள், எம் எல் ஏ கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார், ஆனைமலை நகர திமுக செயலாளர் மருத்துவர் ஏ.பி. செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, ஆகியோர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.