சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டாடைகட்டி ஊராட்சி, சக்கரைக்குளம் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கையை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து உடனடியாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க ராஜா எம்எல்ஏ நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து சக்கரைக்குளம் ,வென்றிலிங்கபுரம் மெயின் ரோட்டில் புதிய 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி
அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் நிகழ்ச்சி யில் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.