திங்கள்சந்தை, ஜன-20
நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பத்ரோஸ் (80) இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பத்ரோஸ் தற்போது காரங்காட்டில் உள்ள அவரது இளைய மகள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7-மேலராமன் புதூர் பகுதியில் உள்ள அவரது இளைய மருமகள் விமலா என்பவர் வீட்டிற்கு சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் கடந்த 13ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவரை கண்டுபிடித்து தருமாறு உறவினர் அஜின் ஜோஸ் என்பவர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் கருப்புக்கோடு ஆண்டார்குளத்தில் நேற்று சடலம் ஒன்று வந்து மிதந்து வந்தது. சந்தேகத்தின் பேரில் பத்ரோ சின் மூத்த மகன் ஜெயக்குமார் என்பவரை அழைத்து பார்த்த போது அது மாயமான பத்ரோஸ் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.