நாகர்கோவில் – டிச- 10,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள சேதமடைந்த கழிவு நீர் ஓடையில் கால் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் முதியவர் படுத்திருப்பதை சாலையில் சென்ற பொதுமக்கள் அப்பகுதி கடை வியாபாரிகளிடம் தகவல் அளித்ததின் அடிப்படையில் , வியாபாரிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து முதியவருக்கு முதலுதவி அளித்து 108 பணியாளர்கள் முதியவரை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் காலை முதல் இரவு வரையிலும் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆடைகள், மற்றும் பொருட்க்கள் வாங்க குடும்பம், குடும்பமாக இப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனார் . அவர்களும் இந்த சேதமடைந்த கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக வே உள்ளது. அது போன்று அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம், மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் இதே பகுதியில் தான் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் இந்த சேதமடைந்த கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக வே உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கழிவு நீர் ஓடையைக்கூட சரியாக மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வில்லை என்பது பெரும் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகத்திற்க்கு சேதமடைந்த கழிவு நீர் ஓடை மூடியினை மாற்றி புதிதாக அமைத்து கொடுக்க உத்தரவு அளிக்கும் படி சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்க்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்க்கும் கோரிக்கை வைத்து உள்ளனர்.