ஈரோடு ,ஆக .8
பெருந்துறையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி கடந்த 1 ந் தேதி தொடங்கியது . அடுத்த மாதம் 8 ந் தேதி வரை இந்த பொருட்காட்சி நடக்கிறது
இந்த பொருட்காட்சியை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் , பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொருட்காட்சி உரிமையாளர் தினேஷ்குமார் வரவேற்றார் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகம் ,ஜெயபிரகாஷ் ,, வக்கீல் சுவாமிநாதன், முத்துச்சாமி, செந்தில்குமார், இன்ப்ராடெக்ஸ் சக்தி, பெருந்துறை ஒன்றிய தி மு க செயலாளர் கே பி சாமி , மணி ,கல்யாண சுந்தரம் ,சம்பத், முருகசாமி, சரஸ்வதி, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். முடிவில் ஏற்பாட்டாளர்கள் உதயகுமார் , நாசர் நன்றி கூறினர்
இது பற்றி பொருட்காட்சி உரிமையாளர் தினேஷ் குமார் கூறியதாவது
பொருட்காட்சியில் டைனோசர், கொரில்லா, பாண்டா கரடி, அனகோண்டா பாம்பு, போன்ற விலங்குகள் ராட்சச வடிவில் மக்களை கவரும் வகையில் ரோபோடிக் முறையில் தத்ரூபமாக உள்ளது மற்றும் பேய் வீடு ,பிரேக் டான்ஸ் மரணக்கிணறு போன்றவையும் இதில் இடம் பெற்று உள்ளன
மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும், 40 விதமான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு உணவு அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9:30 மணி வரை பொருட்காட்சி நடைபெறும் .
இவ்வாறு அவர் கூறினார்.