குளச்சல் ஜூலை 8
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டு அமோக வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். குமரி மாவட்ட மக்களால் இரண்டாவது முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்வான விஜய் வசந்த் டெல்லியில் நடைபெற்ற எம்பிக்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டு இரு தினங்களுக்கு முன் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று குளச்சல் நகரத்திற்கு வருகை தந்த விஜய் வசந்த் எம்.பி.க்கு பீச் ஜங்சனில் வைத்து குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி மாவட்ட தலைவர் ஸ்டார்வின் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீனவ காங்கிரஸ் நிர்வாகிகள் லாலின், ஆஞ்சிலிஷ் மோகன்,மற்றும் சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சில் கலந்து கொள்ள வருகை புரிந்த குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. குமரி மாவட்ட காங், தலைவர் கே.டி.உதயம், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், பிரான்சிஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப் கான், மாவட்ட துணை தலைவர் தர்மராஜ்,ஆரோக்கிய ராஜன், பென்சிகர், அமல்ராஜ், கடிகை ராஜன், ஆல்பிரட், ஜார்ச், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.