தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது கல்யாணிபுரம் கிராமம். இக்கிராமத்தின் வடகாசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி ராசம்மாள் (வயது 75)என்பவர் வழக்கம் போல் இன்று அதிகாலை எழுந்து வீட்டு வாசலுக்கு வந்த போது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த கரடியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி ராஜம்மாள்
சத்தம் போடுவதற்குள் கரடி மூதாட்டியை கடுமையாக தாக்கியுள்ளது .
இதில் முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்த ராசம்மாள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கல்யாணிபுரம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் கடந்த வாரம் கோவிந்த பேரி பஞ்சாயத்து தெருவை சேர்ந்த வடிவு என்ற பெண் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டுள்ளார். எனவே வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது