திண்டுக்கல்
ஜுன் :03
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலை நிறுவனங்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்போம். உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளை முன்னிறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை இல்லா திண்டுக்கல்லை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு
இசை அறக்கட்டளையின் ஆலோசகர் சின்னையா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காருண்யா அறக்கட்டளை நிறுவனர் ஜெரோம் அருள்ராயன் வரவேற்புரை ஆற்றினார். புகையிலையினால் ஏற்படும் தீமைகள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தொழிலாளர்கள் மத்தியில் சாந்தி சேவா அமைப்பின் செயலாளர் அந்தோணி சகாயராஜ் விளக்கவுரை நிகழ்த்தினார் . மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் செல்வம் துண்டு பிரசுரங்களை தொழிலாளர் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்நிகழ்ச்சியானது புனித வளனார் மருத்துவமனை பேருந்து நிறுத்ததில்தொடங்கி திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் பேருந்து நிலையம், நாகல்நகர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மாலை திண்டுக்கல் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைவளாகத்தில் 100க்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வுநிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை சாந்தி சேவா நிறுவன செயலாளர் அந்தோணி சகாயராஜ் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார் .இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஏ.ஜெராக்ஸ் உரிமையாளர் அரங்கநாதன், நல்லுழவர் இயற்கை அங்காடி உரிமையாளர் குரு பாண்டியன், இசை அறக்கட்டளையின் தன்னார்வலர் லெனின் , கலைக்கோட்டை வின்சென்டு, காருண்யா அறக்கட்டளையின் அறங்காவலர் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முடிவில் சமூக ஆர்வலர் மார்ட்டின் நன்றி கூறினார்.