நாகர்கோவில் – ஜன – 16,
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழு முடிவின் படி கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றி கொடுக்க முன்வராத போது நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு முன்னால் முதல்வர் கலைஞர் டாக்டர். கருணாநிதி வேலை வழங்கினார். அதை கடந்த 23 ஆண்டு காலம் பயன் பெற்று வந்ததை நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வலியுறுத்தியும்,
கடந்த 2007 க்கு பிறகு பணிக்கு வந்த சிபிஎஸ் திட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற இறந்து போன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையும் அதற்குண்டான அரசு பங்கீடும் இது நாள் வரை வழங்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தியும், புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் தற்க்காலிகமாக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே சிபிஎஸ் எண் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
கிராம உதவியாளர்களை கிராம பணி பார்ப்பதற்க்காக பணி அமர்த்தப்பட்டவர்களை கிராம பணியைத் தவிர பல்வேறு மாற்று பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்று அன்றைய வருவாய் நிர்வாக ஆணையர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மாற்று பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்திட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நிறைவேற்றி கொடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 23.01. 2025 அன்று தமிழ்நாடு அனைத்து வட்டாட்சியர் அலுவலக முன்பு மாலை 5:45 மணி அளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், பின்பு 5 .2 . 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6:00 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கையாக 27 .2 .2025 அன்று வருவாய் கிராம ஊழியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கிராம உதவியாளர்களும் ஒரு நாள் விடுப்பு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.