தஞ்சாவூர், அக்.18
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் 3600 பேர் கலைஞரி ன் கனவு இல்லத்திட்ட பணிகளில் பயன் பெறுகின்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக முதல்வரின் ஆணைப்படி ஊரகப்பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் ரூபாய் 1 லட்சம் வீடுகள் தலா ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதன் மூலம் 6 ஆண்டுகளில் குடிசைகள் இல்லா மாநிலம் என்ற இலக்கை அடைய தமிழக அரசு முனைப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 2024 – 25
ஆம் ஆண்டின் 3600 பயனாளிகளு க்கு கலைஞர் கனவு இல்ல திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலைஞர் கனவு இல்லத்திட்டத் தின் தகுதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் பயன்பெறலாம், tnrd.tn.gov.in மற்றும் tndrdpr.org இணைய தளத்தில் உள்ள தகுதியான பயனாளிகளின் பட்டியல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநரால் மாவட்டங்களுக்கு பகிரப்படும் தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன் பெறலாம்.