நாகர்கோவில், ஜூலை 03 ,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஹென்றி தெரு நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் வயது (83) முதியவர் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார் அந்த மனுவில் கூறி இருப்பதாவது :
நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட மறுகால் தலை பகுதியில் தனக்கு சொந்தமான 2.75 ஏக்கர் தென்னை தோப்பு உள்ளது அதில் விவசாயம் செய்தும் கால் நடைகளான ஆடு, மாடு, கோழிகள் மற்றும் அவைகளை பாதுகாக்க நாய்களும் வளர்த்து வருகிறேன் இந்த கால்நடைகள் மூலம் தினமும் 70 லிட்டர் பால் உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறேன் அதற்கு மாட்டு தொழுவம் சரியாக கிடையாது ஆகவே எனது தோப்பில் மழை பெய்து சகதிகளாக மாறிக் கொண்டிருக்கிறது மேலும் இதன் மூலம் கால்நடைகளை தொற்று கிருமிகள் தாக்குகின்றன இதனால் எனது கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்படுகின்றன. இதனால் நான் இரண்டு தடவை அரசு மருத்துவர் மூலம் ஊசி மருந்து செலுத்தியும் பராமரித்து வருகிறேன். இந்த கால்நடைகளை பார்த்த மருத்துவர்கள் இந்த இடத்தில் உள்ள சகதிகளை அப்புறப்படுத்தி விட்டு மாட்டு தொழுவத்தில் நீர் தேங்காமல் வைக்குமாறு கூறினார்கள். நான் அதற்கான முயற்சியை எடுக்கும் போது 45- வார்டு கவுன்சிலர் சதிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தடுப்பதால் நான் இவ்விடத்தில் கால்நடைகள் வளர்ப்பது வார்டு கவுன்சிலர் சதீஸ் என்பவருக்கு பிடிக்கவில்லை மேலும் இத்தோப்பு சம்பந்தமான பல புகார்கள் காவல் நிலையத்தில் நான் அளித்தும் காவல் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதனால் என் கால்நடைகள் நோய்வாய்ப்படுகிறது இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் மேலும் 29 . 6 .2024 அன்று ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தேன் அப்பொழுதும் காவல் நிலைய அதிகாரிகள் சதீஷை 2 முறை அழைத்த பிறகும் காவல் நிலையம் வர முடியாது என மறுத்து விட்டதாகவும், சதீஷ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காவல் அதிகாரிகளை அவரது இடத்திற்கு வரச் சொன்னதாகவும் காவல் அதிகாரியும் அத்தோட்டத்தை பார்வையிட்டார் தோட்டத்தை பார்வையிட்டு சரி என்று சொன்னவர்கள் கவுன்சிலர் சதீஷை பார்த்த பிறகு முடியாது என்று மறுத்து விட்டதாகவும் . அவர் அவரது கவுன்சிலர் பலத்தை பயன்படுத்தி காவல்துறையிடம் அதிகாரத்தை பயன்படுத்துகிறார் எனவே கவுன்சிலர் இடம் இருந்து எனது கால்நடைகளுக்கும் எனக்கும் பாதுகாப்பு வழங்கும் படியும் எனது தோட்டத்தில் கால்நடைகளுக்கு தொழுவம் அமைக்க தாங்கள் அனுமதி வழங்கும் படியும் அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.