சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம் குறிப்பாக
வார நாட்களான வெள்ளி ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் வரக்கூடும் இது போன்று கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் போது அறநிலைத்துறை ஊழியர்களுக்கும் அங்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பக்தர்களை அறநிலைத்துறை ஊழியர்கள் தாக்கும் நிலையும் சில நேரங்களில் நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரான் மலையில் இருந்து ஒரு குடும்ப சொந்த பந்தங்கள் வேணில் வந்து வேண்டுதலாய் கொண்டு வந்த கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபடுவதற்காக சமையல் செய்து கொண்டிருக்கும் போது அந்த குடும்பத்துடன் வந்திருந்த ராஜ்குமார் சங்கீத பிரியா இவர்களின் மகள் வர்ஷா என்ற வயது 8 குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிப்பதற்காக ஒரு மறைவான இடத்திற்கு சென்று சிறுநீர் கழிக்கும் போது அங்கு ஊண்டப்பட்டு இருந்த மின் கம்பியை தொட்டுள்ளாதாகவும் அதில் மின்வாரிய போஸ்டில் இருந்து கோவிலுக்குள் செல்லும் வயர் சுற்றப்பட்டு கோயிலுக்குள்ளே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது சுற்றப்பட்ட கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி சம்பந்தப்பட்ட இடத்தில் உயிரிழந்து உள்ளார் இதைப் பார்த்த சிறுவர்கள் அந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறியவுடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை தூக்கி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பாக திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற காரணங்களுக்கு கோவில் நிர்வாகமே பொறுப்பாகும் என்று குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.