கோவை ஜூலை: 12
கோவை மாவட்டம் தடாகம் சாலையில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்டின் 2024-ம் ஆண்டிற்கான மாணவர்களின் துவக்க விழா அமிர்தா நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எல்அண்டுடி விவாண்டா மேலாளார் ஜிஃப்னா ஹென்றி ஹேஸ் 6 ஹோட்டல் ஹெச் ஆர் மேலாளர் மதன்குமார் மற்றும் அமிர்தாவின் முன்னாள் மாணவர்கள் செஃப் மனோஜ் பிரபாகர் சவுதி அரேபியா பேஸ்ட்ரி செஃப் குகன் ஆந்திரபிரதேசம் பேஸ்ட்ரி செஃப் ஹரீஸ் குப்பம் கத்தார் எஃப்அண்டுபி மேற்பார்வையாளர் ரம்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இதுகுறித்து அமிர்தா நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் தெரிவிக்கையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையானது மிகவும் சிறப்பு வாய்ந்த துறையாகும். இந்த துறை சார்ந்த கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு 100சதவீதம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.மேலும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள 7மற்றும் 5அடுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து பயனடையவேண்டும் என்றும் கூறினார். இந்த துறையில் பயின்றவர்கள் சுயதொழில் செய்வோராகவும் உள்ளனர்.முன்னாள் மாணவ மாணவியர்கள் வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டல்களில் சிறப்பாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு அனுமதி அட்டை வழங்கினார் மேலும் மலேசியா செல்லும் நான்கு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் இரண்டு மாணவர்களுக்கு பிரான்ஸ் நாடு செல்வதற்கான விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த துவக்க விழாவில் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.