நாகர்கோவில் டிச 20
சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மீதான விவாதத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த சொற்கள் இந்திய அரசியலமைப்பை கொச்சை படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவே அரசு அண்ணல் அம்பேத்கருக்கும் அவரது சேவைகளுக்கும் செலுத்தும் உண்மையான மரியாதை என அவர் தெரிவித்தார்.