மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அருகே மேலக்கோட்டை பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி மதுரை தெற்கு ஒன்றியம் சார்பில் மதுரை தெற்கு ஒன்றிய செயலாளர் பழக்கடை சுப்பிரமணியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது தொடர்ந்து தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் 62 பேருக்கு பானை வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் கலைச் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் சிவக்குமார் முனியாண்டி பாலமுத்துபாண்டி யோகாகதிர்மாறன் கிருஷ்ணன் சிந்தனைவளவன் பொன்பூமிநாதன் கந்தையா லஜபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.