நாகர்கோவில் ஏப் 15
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் 134 வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு புரட்சித் தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் அம்பேத்கர் குறித்து தெரிவித்ததாவது:-டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல சாதனைகளைச் செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடி இந்திய அரசியலமைப்பின் வரைவை எழுதியது மட்டுமல்லாமல் , தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர், சமூக சீர்திருத்தவாதி, ரிசர்வ் வங்கியின் முதல் திட்டமிடுபவர், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர், 8 மணி நேர வேலை நாள் போன்ற திட்டங்களை முன்மொழிந்தவர். தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். அனைத்து சாதியினரும் கோவில்களில் நுழைய உரிமை வேண்டும் என்று போராடினார். தலித் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து போன்றவற்றுக்காகப் பாடுபட்டார். அம்பேத்கரின் சாதனைகள் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளன. அவர் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையக்காகவும் பாடுபட்டவர் ஆவார். அவரின் 134 வது பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மனநிறைவையும் மகிழ்ச்சியும் தருவதாக தெரிவித்தார்.