நாகர்கோவில் டிச 7
சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் 68-வது நினைவுநாளை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு, முன்னாள் அமைச்சர் பத்மனாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ்,
திமு கழக தணிக்கைக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர், சுரேஷ்ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநில நிர்வாகி இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் ஜோசப், இம்மானுவேல், செல்வகுமார், செல்வராஜ், காரவிளை செல்வன், ஆசீர், சங்கர், அசோகன், சார்லஸ், உமா, ரணீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.