கீழக்கரை ஜூன் 25-
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 1987-90, 1988-1991. 1989-1992ஆம் ஆண்டு பயின்ற முள்ளாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 22.06.2024 சனிக்கிழமையன்று முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் A. சேக்தாவூத் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் காந்தி (1987-90) வரவேற்புரையாற்றினார். புதுமடம் ஹலீம் (1988-91) துவக்கவுரையாற்றினார். முன்னாள்மாணவர்கள் தங்கள் கல்லூரிகால பசுமையான நிகழ்வுகளை உணர்ச்சிபொங்க நினைவு கூர்ந்தனர். ஆசிரியர்கள் தம்பிதுறை, நவநீதராஜன், கமால் அப்துல் நாசர், மதியழகன். மோகன் தாஸ், மனைச்செல்வி. S.P. நாகராஜன் மற்றும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் A. அலாவுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்ப்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை கௌரவித்து அவர்களிடம் வாழ்த்துக்களைப் பெற்றனர். இந் நிகழ்ச்சியில் கல்லூரியில் உள்ள அனைத்து துறைத்தலைவர்களும். ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் ராஜாராம் பாண்டியன் (1989-92) நன்றியுரையாற்றினார்.