சங்கரன்கோவில்.மே.27.
தென்காசி அருகே உள்ள மேலகரம் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு முன்னாள் தலைமை ஆசிரியர் மயிலேரி தலைமையில் நடந்தது. இதில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரான திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வள்ளியம்மாள்
முன்னாள் தலைமை ஆசிரியர் ஶ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து கொன்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழுவை சேர்ந்த மகாராஜன், உலகநாதன், செந்தில், உடற்பயிற்சி ஆசிரியர் துரைராஜ், ரகுமான், ராஜா பள்ளி தலைமை ஆசிரியை கவிதா ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தது முன்னாள் மணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.