தமிழக முதல்வர்,திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு,ஒன்றிய செயலாளர் செளந்திரபாண்டியன் தலைமையில் வடக்கு ஒன்றிய திமுக வினர் ஏழை எளிய முதியவர்களுக்கு அறுசுவை அன்னதானம் உட்பட
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் மார்ச்05 மாலையகவுண்டன்பட்டியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு,வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தலைமைக்கழகம் உத்தரவுப்படி
“”தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதர்க்காகவும் விட்டுத்தர மாட்டோம்,தமிழ் நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்! இதுதான் எங்கள் ஒரே இலக்கு’’! என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்,தொடர்ந்து ஒன்றிய செயலாளர் செளந்திரபாண்டியன் தலைமையில் செம்பட்டி,சிலுக்குவார்பட்டி,
சக்கையாநாயக்கனூர்,காமலாபுரம் மற்றும் மாலையகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புககள் வழங்கி கொண்டாடினர்,தொடர்ந்து சாலையோர ஆதரவற்ற முதியோர் இல்த்தில் உள்ள முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை அன்னதானம்,சேலை,வேஸ்டிகள், போர்வைகள் வழங்கினர்,
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் அழகேசன், ஆரோக்கியம்,அண்ணாதுரை மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பதினெட்டாம்படி,பெனிட்,சங்கர், காட்டுராஜா,கணேசன்,தேவநாதன், கோபால்,செம்பர்சுரேஷ்
உட்பட மாவட்ட ஒன்றிய ஊராட்சி பேரூர் கிளைக் கழக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.