வேலூர்_19
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த சத்துவாச்சாரி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் அவர்களின் துணைவியர் தெய்வத்திரு எஸ். சாந்தி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி நித்திய அன்னதானம் வழங்கும் இடத்தில் தலை வாழை இலையில் அன்னதானம் பொதுமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், வழங்கினர் இதில் நித்திய அன்னதான அறக்கட்டளை தலைவர் எஸ். எம். செல்வராஜ், செயலாளர் எம்.பார்த்தசாரதி, பொருளாளர் மோகன், செங்குந்த சமுதாயத் தலைவர் பி .எஸ் .சுகுமார், 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி மனோகரன், பி. எஸ். பாலசுந்தரம் ,நித்தியானந்தம் ,மற்றும் நித்திய அன்னதான அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர் .