கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு சென்னை, தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பு படிக்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்த மாணவி ச.மனோஷிய அவர்களுக்கு நான்கு வருடம் உயர் கல்வி இலவசமாக படிக்க உதவி செய்யப்பட்டது. இதில் அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் முனைவர். டாக்டர். தே தேவ் ஆனந்த், பொறியியல் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் மு. திருப்பதி உடன் இருந்தனர் இவர்களுக்கு பெற்றோர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் மேலும் இதே போல் நமது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளுக்கு இலவச கல்வி வழங்கிஉள்ளனர் மேலும் இது போல் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாய், தந்தையை இழந்த அனைத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது இந்த சேவையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
Leave a comment