திண்டுக்கலில் இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் பிள்ளையார்நத்தத்தில் உள்ள டாக்டர். முரளிதரன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு
ரோட்டரி சங்கம் மற்றும் PSNA கல்லூரி ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது.
இதில் 100க்கும் மேற்பட்ட ரோட்டராக்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக PDG .தாமோதரன், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் எஸ்.சண்முகம், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் H.புருசோத்தமன், செயலாளர் P.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் PSNA கல்லூரி சார்பாக முதல் பரிசாக ரூபாய் 50,000 யும், ரோட்டரி கிளப் ஆப் தேனி சென்ட்ரல் ஜெம்ஸ் சார்பாக இரண்டாம் பரிசாக ரூபாய் 30,000 யும், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக மூன்றாம் பரிசாக ரூபாய் 20,000 யும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம், ரோட்டரி கிளப் ஆஃப் தேனி சென்ட்ரல் ஜெம்ஸ், பழனி ரோட்டரி சங்கம், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் ஆகியவை பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை
சுனில் கௌதம் ராஜ் சிறப்பாக தொகுத்து வழங்கினார். முடிவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.