மதுரை நவம்பர் 14,
மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் புதிய கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி மூலம் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி பிரியாந்த்,
செயற்பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கேற்றி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் பாபு, வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர். தீபா தங்கம், எ பேரூராட்சி தலைவர் குமரன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், கிளை செயலாளர் முத்துப் பொருள், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, கண்காணிப்பாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இனிப்பு வழங்கினார்கள்.