கன்னியாகுமரி ,ஆக.3-
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அடுத்த கிண்ணிக்கண்ணன்விளை ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா கடந்த 29-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.3-ம் நாள் விழாவான நேற்று ஆர்.எஸ்.ராமசாமி நாடார் நினைவாக கோயில்விளை ஊர் தோழர் கலாமன்றம் சார்பில் அரிச்சந்திரா புராண நாடகம் நடைபெற்றது.நாடகத்தை முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.
விழாவின் முக்கிய நாட்களான 8-ம் தேதி மகுட கச்சேரி, ஆலடி சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனனையும், 9-ம் தேதி காலையில் நாதஸ்வரம், வில்லைசையும், பகல் 12:30 சமபந்தி விருந்து நடக்கிறது. சமபந்தி விருந்தினை எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் தொடங்கி வைக்கிறார்.
பகல் 1 மணிக்கு காலசுவாமிக்கு மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜை, மாலையில் தோட்டுக்காரி அம்மன், கருங்கிடாய்காரன், செங்கிடாயாகாரன் , உச்சிபுலி மாடன் ஆகிய சுவாமிகளுக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு மன்னராஜா சுவாமி மற்றும் குலைவாழை இசக்கியம்மனுக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது.
இரவு 10 மணிக்கு கட்டை ஏறும் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனனையும், நள்ளிரவு அர்த்த சாம பூஜையும் நடக்கிறது.