பிப்:26
திருப்பூர் மாநகர மாவட்டத்தில் மஸ்ஜித் சேவைக் குழு நிர்வாகிகளால் பல ஆண்டுகளாக மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அவிநாசி கணியம் பூண்டி பகுதியில் ஹாஜி ஜமால் மைதீன் பாய் அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் கடந்த சில ஆண்டுகளாக தொழுகையில் கவனம் செலுத்தி அனைவரையும் தொழுகையின் பக்கம் ஈர்த்து வருகிறார் அனைத்து சமுதாய மக்களுக்கும் மாதம்தோறும் மளிகை பொருட்கள் அசைவ உணவு பொருட்கள் மருத்துவப் பொருட்கள் அனைத்து உதவிகளும் இஸ்லாமிய மார்க்க கல்வி இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார் இவரின் நற்பணிகளை பாராட்டி இஸ்லாமிய மக்கள் அனைத்து தரப்பு மக்கள் பாராட்டி வருகின்றனர். பரிசு அளிப்பு விழாவில் உலாமாக்கள் அப்துல் சலாம், முகமது யூசுப், இர்ஃபான், தாஹா ஹாஜிசுஹைப் எம்எஸ்கேஹக்கீம்,
பி எம் கே இஸ்மாயில், ஹாருண் ரசீது, சையது இப்ராஹிம், அமீர் அம்ஜாமுரலி,நவீத்அகமது,நஸ்ருதீன்,சூர்யா, மற்றும் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.