ஈரோடு டிச 2
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் மாவட்ட ஆட்சிதலைவர் ராஜ கோபால் சுன்கரா
தலைமையில் உலக எய்ட்ஸ் தின
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது .
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர்
எச்.ஐ.வி எய்ட்ஸ்
விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை விழிப்புணர்வு பதாகையில்
கையெடுத்திட்டு விழிப்பணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி துணை இயக்குநர் (சுகாதார
பணிகள்) அருணா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) கவிதா, மாவட்ட திட்ட மேலாளர் (மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு) துரைசாமி உட்பட தமிழ்நாடு
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன
பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.