நாகர்கோவில் ஏப் 01,
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அதிமுக சார்பில் 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அக்ஷ்யாகண்ணன் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர், எடப்பாடி கே. பழனிசாமி ஆணையின்படி, கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தளவாய் சுந்தரம் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷ்யாகண்ணன் ஏற்பாட்டில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வி. எம். ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.