அஞ்சுகிராமம் ஏப் 1
அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி ஆணையின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்பேரில், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ஜெஸீம் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வி. எம். ராஜலெட்சுமி பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மயிலாடி பேரூர் செயலாளர் மனோகரன், மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன், மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி சீனிவாசன்,
அழகப்பபுரம் பேரூர் செயலாளர் மணிகண்டன், பஞ்சலிங்கபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆ. கண்ணன், ஆரல் கிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.