திருப்பூர் செப்டம்பர்: 24
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் அதிமுக மாமன்ற உறுப்பினருக்கு தகவல் கொடுக்காமல் வார்டுக்குள் நுழைந்து அரசியல் செய்வதாக கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் திமுக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன்வர் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, மேலும் வார்டுகளுக்குள் உள்ள பிரச்சனைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து மனுக்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் பாலசுப்பிரமணியன் அதிமுக மாமன்ற உறுப்பினர் வார்டுகளுக்குள் மாமன்ற உறுப்பினரிடம் தகவல் தெரிவிக்காமல் வருவதாகவும், அங்கு வந்து அரசியல் செய்வதாகவும் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர் RA.சேகர் தெரிவிக்கையில், அதிமுக 7-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவிதா விஜயகுமார் பகுதியில் துணை மேயர் பாலசுப்பிரமணியன் கம்யூனிஸ்ட் தோழர்களை இணைத்துக் கொண்டு ஆய்வு செய்தும், போராட்டங்களையும் நடத்தி வருவதாகவும், இது குறித்து மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார், ஆனால் இதற்கு மாமன்ற கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் பதிலளிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினருக்கு பதிலளிப்பதாகவும், இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதேபோன்று அதிமுகவினர் எந்த ஒரு கோரிக்கையை வைத்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பதில் அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோ திமுக ஆட்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்காமல் வேற தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை வைத்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார், உடனடியாக இந்த போக்கை நிறுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக மாமன்ற உறுப்பினர் RA.சேகர் தெரிவித்தார்.