வேலூர்_25
வேலூர் மாவட்டம் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும்,சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர். மு க ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும்
முதலமைச்சர் மு க ஸ்டாலின்,ராஜினாமா செய்ய வலியுறுத்தியும்,கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்திற்கு நீதி வேண்டும்
என வலியுறுத்தியும், கலாச்சாராயத்திற்கு துணை போகும் திமுகவினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்,
கள்ளச்சாராயத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.கள்ளச்சாரரை உயிரிழப்புக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகளை இருபில் வைக்க வேண்டும் கள்ளச்சாராயம் விற்பனைக்காக காவல்துறையும் உளவுத்துறையும் சரியாக செயல்பட விடாத முதலமைச்சரை கண்டிக்கின்றோம்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளிட்டா பல்வேறு கோஷங்களை எழுப்பி அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்கே அப்பு. வேலழகன். கழக அமைப்பு செயலாளர் வி.ராமு. தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 700க்கும் மேற்பட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் நூற்றுக்கணக்கான போலீசாரும் ஆர்ப்பாட்டத்தை விட்டு குவிக்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.ரெட்டி. பகுதி கழகச் செயலாளர்கள் பேரவை ஏ.இரவி பி.ஜனார்த்தனன். பி.நாராயணன். குப்புசாமி. வேலூர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராகேஷ். வேலூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் அமர்நாத். வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜசேகர் வேலூர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி.பாலாஜி 6-வது வார்டு வட்ட செயலாளர் என்.எழிலரசன். 4-வது வட்ட செயலாளர் கோபிநாத். மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்