மார்த்தாண்டம் டிச. 31-
மார்த்தாண்டத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதை கண்டித்தும் குமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மார்த்தாண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது
மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் தலைமை வகித்தார் அவைத்தலைவர் சிவ குற்றாலம், பொதுக்குழு உறுப்பினர் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் குழித்துறை நகரச் செயலாளர் நகர செயலாளர் அழகுராஜ் வரவேற்றார்
முன்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், நகர முன்னால் செயலாளர் ராஜன், எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயச்சந்திரன், வக்கீல் அருள்ராஜ், நாஞ்சில் டொமினிக் உட்பட பலர் கலந்து கொண்டனர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக100 பேர் கைது செய்யப்பட்டனர்