தென்காசியில் கொட்டும் மழையில் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்த நிலையில் மேலும் 60 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கள்ளச்சாராய மரணத்திற்கு ஆளும் திமுக அரசு தான் முழு காரணம் என்றும் கள்ளச்சாராய மரணத்திற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை கண்டித்தும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன், தென்காசி நகர செயலாளர் சுடலை, சண்முகசுந்தரம், சிவஆனந்த், தென்காசி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் சிவா மற்றும் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.