தஞ்சாவூர். ஏப்ரல்.22
தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதித்த அதிமுக இப்போது நாடகமாடு கிறது என்றார் .உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத் தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா வில் கலந்து கொண்டு, கரந்தை தமிழ் சங்கம் நிறுவிய துங்கன் த.வே. ராதாகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து, சங்க வெளியிடா ன காக்கை விடு தூது என்ற நூலை மறு வெளியீடு செய்து, நூற்றாண்ட டு கண்ட தமிழாராய்ச்சி திங்களித ழான தமிழ் பொழில் இலச்சினை அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் .மு.சே.முத்துராமலிங்க ஆண்ட வர் எழுதிய தமிழன் பெருஞ்சுவர், வள்ளலார் காலமும் கருத்தும் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டார். மக்களவை உறுப்பினர் ச.முரசொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திர சேகரன், டி கே ஜி நீலமேகம் ,மேயர் சண்.ராமநாதன் ,துனை மேயர் டாக்டர்அஞ்சுகம் பூபதி, சங்க செயலர் இரா.சுந்தரவதனம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக கரந்தை உமாகேசுவரனார் கலைக்கல்லூரி முதல்வர். இரா. இராசாமணி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக சங்க செயற்குழு உறுப்பினர் எஸ் ஆர் எஸ் செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூவி செடியின் பேசுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைவதற்கு அனைத்து நிலைகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டது அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வராக ஜெயலலிதா இறந்த காலம் வரை நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு இடம் தரவில்லை அவரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் 4 ஆண்டுகளாக மத்திய மோடி ஆட்சியின் பைபிள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்த காரணத்தால் அன்றைக்கு நீட் தேர்வு ஏற்றுக்கொண்டார். ஆனால் நீட் தேர்வை திமுக எதிர்ப்பது மட்டுமல்ல ,நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப்பேரவையில் எதிராக தீர்மானம் நிறைவேற்றி யது இதை மடமாற்றுவதற்காகவும், மறைப்பதற்காகவும் நீட் தேர்வை உள்ளே நுழைய விட்ட எடப்பாடி பழனிசாமி இப்போது போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குரியது, மட்டுமல்ல நகைப்புக்குரியதாக உள்ளது. என்றார் ஆமைச்சர்.