மார்ச்:1
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் திமுக தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை மற்றும் பாரபச்சம் காரணமாக நிதி வழங்கப்படாமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் விளங்கி வருகிறார். தற்பொழுது 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள உள்ளது.
பாஜக அரசு எந்த ஒரு செயல்பாட்டையும் சொல்லிவிட்டு செய்வதில்லை விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து முறையான விளக்கங்கள் வழங்கப்படாமல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் ஐந்து மாநிலங்களில் வெற்றி பெறுவதன் மூலம் பாஜக ஆட்சி அமைக்க முடியும் எனவும் இந்த திட்டமும் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க செய்யப்படும் மறைமுகமான வழி என தெரிவித்தார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது முறையாக இல்லாத சூழலில் இது போன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலமாக நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை என்பது பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க செய்யும் திட்டமாக உள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைக்கப்படவும் அதிகாரம் பறிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. அண்ணாமலை அரை வேக்காட்டு தனமாக பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.
அவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என அனைவரையும் ஒருமையில் பேசி வருகிறார். மேலும் பாஜக அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதைப் போல தன்னிச்சையாக செயல்படுகிறது இந்த திட்டம் ஒரு பேராபத்து எனவும் தென்னகத்தின் அதிகாரம் பறிக்கப்படும்.
என தெரிவித்தார். தொகுதி மறு வரையறை குறித்து அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் 2026 தேர்தலுக்கு முன்பு அதிமுக இருக்கிறதா என பார்க்க வேண்டும். என தெரிவித்தார்.