கன்னியாகுமரி ஜூன் 24
கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் சட்டமன்ற தொகுதி அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று குளச்சல் பள்ளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வள்ளிநாயகம்,செல்வ சேகர், செர்ஜியூஸ், வால்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வந்திருந்தவர்களை வாணியக்குடி ஆரோக்கியம் வரவேற்றார்..
கூட்டத்தில் ரூபி சந்திரா,ஜெயராஜ் முத்து கிருஷ்ணன், சுயம்பு செல்வன், செய்யது,கரீம், அருள்குமார்,வினோத் ராஜம் ஆகியோர் உரையாற்றினர்.
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் ராஜாக்கமங்கலம் ஐயப்பா சேவா சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மெர்சி நன்றி உரையாற்றினார்.