இராமநாதபுரம் ஜுன் 29.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய பெரும் தலைவர் சண்முகபிரியா ராஜேஷ் தலைமையில்.ஆனையாளர் கானகி. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள் அன்புக் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. துணை சேர்மன் கண்ணகி அனைவரையும் வரவேற்றார். கவுன்சிலர்களிடையே விவாதம் வருமாறு: அர்ச்சுணன் (வள நாடு) மட்டியரேந்தல், தாழியரேந்தல் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம் உள்ளதா? 10 காய்க்கு வாங்கும் தண்ணீரை விட்டால் வேறு நீர் ஆதாரம் கிடையாது. – கலைச்செல்வி ராஜசேகர் (வெங்களகுறிச்சி) வெங்களகுறிச்சி கிராமத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்..கோதண்டம் தேரிருவேலி) தேரிருவேலியில் கழிவரைகளை சுத்தம் செய்ய வேண்டும். அர்ச்சுனன் வளநாடு: பொக்கனரேந்தல் பொன்னக்கனேரி, வளநாடு ஆகிய காமங்கள் குடிநீர் குழாய் உடைப்பைசி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது முடிவில் ஆனையாளர் ஜாணகி நன்றி கூறினார்.