கிருஷ்ணகிரி அக்.28,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் அஇஅதிமுகவின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மத்தூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சென்னகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி வரவேற்புரையாற்றினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் மற்றும் ஊத்தங்கரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசியபோது, வருகின்ற 2026ல் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் அரியணையில் ஏற்ற கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்த 18 மாதத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டுமென பேசினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான் நன்றியுரையாற்றினார். அதிமுகவின் பொருப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் 1000த்தற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.