அரியலூர், அக்.18
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர், கீழப்பழுவூர், திருமானூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவதித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டச் செயலாளர் ப.இளவழகன், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகர செயலர் ஏ.பி.செந்தில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், பாலு(எ)பாலசுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலர் நா.பிரேம்குமார்,அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட மகளிரணிச் செயலர் ஜீவாஅரங்கநாதன், வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் ராமகோவிந்தன், வெங்கடாஜலபதி, செல்ல.சுகுமார், சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்