கோவை செப்:04
அஹல்யா மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி அடுத்த பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள அஹல்யா மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் உள்ளன. இதில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ பிரிவு, மகப்பேறு மருத்துவம், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அறுவை சிகிச்சைகள் மற்றும் பிரசவத்திற்கு காப்பீடு திட்டங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மகப்பேறு மருத்துவர் பிரிவு சார்பில் புதிதாக சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கருவுற்ற நாள் முதல் குழந்தை பிறக்கும் வரையிலான எல்லா செலவுகளும் 24,999 ரூபாய் கட்டணத்தில் சிறந்த மருத்துவம் அளிக்கப்படும் என்பதை தெரிவித்தனர். குறைந்த கட்டணம் என்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தனர்.