

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, ரூ.10 கோடியே 88 இலட்சத்து 35 ஆயிரம் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், தடுப்பணைகள், ஏரி, குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது என செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கங்கலேரி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ட்ரோன் மூலம் நெல் வயல்களுக்கு மருந்து தெளிக்கும் பணிகள் மற்றம் வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு ., அவர்கள் 30.08.2024 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடவும், வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், விவசாயிகளுக்கு 1,50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள், மண் வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பாக, கலைஞர் அனைத்து
கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 100 சதவிகித மானியத்தில் தரிசு நில தொகுப்பிற்கு
ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்துதல், ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு
ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று பாசன வசதி ஏற்படுத்துதல், தனி நபர்
விவசாயிக்கு பண்ணை குட்டை அமைத்தல், மேலும், சிறுகுறு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம்
மானியம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர்,
சுழல் கலப்பை, டிராக்டர், பிரஷ்கட்டர், கலப்பை, சோலார் பம்பு செட், சோலார் மின் வேலி, பழைய
மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டாரை பொறுத்துதல், சிறுதானிய இயக்க திட்டத்தில் உழவு
மானியம் மற்றும் குளம் குட்டை, ஏரி தூர்வாரி சீரமைத்தல், நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறைந்த வாடகையில் டிராக்டர் மூலம் நிலம் உழவு செய்தல் போன்ற உள்ளிட்ட பல்வேறு
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.வேளாண்மை பொறியியல் துறை சார்பாக 2021-22 ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரம் வாடகை மையம் அமைக்க 11 குழுவினருக்கு ரூ.88 இலட்சம் மானியத்தில் டிராக்டர், ரொட்டவேட்டர், கதிரடிக்கும்பெட்டி, கலப்பை, சுழல் கலப்பையும், மழைநீர் சேகரிக்கும் பொருட்டு 5 விவசாயிகளுக்கு ரூ.4 இலட்சத்து 90 ஆயிரம் மானியத்தில் 5 பண்ணை குட்டைகளும், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 29 விவசாயிகளுக்கு ரூ.36.79 இலட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், 5 விவசாயிகளுக்கு ரூ.12.78 இலட்சம் மானியத்தில் சோலார் பம்பு அமைக்கவும், 3 பயனாளிகளுக்கு ரூ.2.81 இலட்சம் மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்கவும், 9 விவசாயிகளுக்கு ரூ.4.44 இலட்சம் மானியத்தில் அறுவடைக்குப் பின் மதிப்பிக்கூட்டு இயந்திரங்களும், நதிப்பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 19 இலட்சத்து 66 ஆயிரம் மானியத்தில் புதிய தடுப்பணைகள் என மொத்தம் ரூ.2 கோடியே 68 இலட்சத்து 38 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2022-23 ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரம் வாடகை மையம் அமைக்க 2 குழுவினருக்கு ரூ.16 இலட்சம் மானியத்தில் டிராக்டர், ரொட்டவேட்டர், கதிரடிக்கும்பெட்டி, கலப்பை, சுழல் கலப்பையும், மழைநீர் சேகரிக்கும் பொருட்டு 11 விவசாயிகளுக்கு ரூ.13.22 இலட்சம் மானியத்தில் 11 பண்ணை குட்டைகளும், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 37 விவசாயிகளுக்கு ரூ.42.73 இலட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், 37 விவசாயிகளுக்கு ரூ.92.29 இலட்சம் மானியத்தில் சோலார் பம்பு அமைக்கவும், 2 பயனாளிகளுக்கு ரூ.2.40 இலட்சம் மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்கவும், 1 குழுவுக்கு அறுவடைக்குப் பின் மதிப்பிக்கூட்டு இயந்திரம் ரூ.4.86 இலட்சம் மானியத்தில், 14 தனி நபர்களுக்கு ரூ.8.31 இலட்சம் மானியத்தில் அறுவடைக்குப் பின் மதிப்பிக்கூட்டு இயந்திரங்களும், நதிப்பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ், ரூ.80.2 இலட்சம் மானியத்தில் 21 தடுப்பணைகளும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 8 குழுவினருக்கு ரூ.35.96 இலட்சம் மானியத்தில் 50 சதவிகிதம் மதிப்பில் பவர் டில்லர்களும், பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டாரை பொறுத்துதல் திட்டத்தின் கீழ், 21 விவசாயிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மானியத்தில் புதிய மின்மோட்டார்களும், சூரிய கூடார உலர்த்தி 2 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 36 ஆயிரம் மானியத்திலும், கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தனிநபர் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தில் 16 விவசாயிகளுக்கு ரூ.40.4 இலட்சம் மானியத்தில் ஆழ்துளை கிணறும், 11 விவசாயிகளுக்கு ரூ.13.22 இலட்சம் மானியத்தில் பண்ணை குட்டைகளும், ரூ.19.18 இலட்சம் மதிப்பில் 10 ஏரி தூர்வாரும் பணிகளும், கலைஞரின் அனைத்து
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.19.55 இலட்சம் மானியத்தில் 23 பயனாளிகளுக்கு பவர் டில்லர்கள் என மொத்தம் ரூ.3 கோடியே 79 இலட்சத்து 98 ஆயிரம்
மானியம் வழங்கப்பட்டுள்ளது.2023-24 ம் நிதியாண்டில், வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ், 87 தனிநபர் விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 27 இலட்சத்து 52 ஆயிரம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களும், 2 விவசாயிகளுக்கு சூரியகூடார உலர்த்தி ரூ.5.21 இலட்சம் மானியத்திலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 7 குழுவினருக்கு ரூ.36.82 இலட்சம் மானியத்தில் ஆழ்துளை கிணறும், 21 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 25 இலட்சம் மானியத்தில் ஆழ்துளை கிணறும், 5 தனிநபர் விவசாயிகளுக்கு ரூ.4.92 இலட்சம் மானியத்தில் பண்ணை குட்டையும், 28 விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ரூ.23.80 இலட்சம் மதிப்பில் பவர் டில்லரும்,ஏரி தூர் வாரும் திட்டத்தின் கீழ், ரூ.55.92 இலட்சம் மானியத்தில் 56 ஏரிகள் என மொத்தம் ரூ.7 கோடியே 79 இலட்சத்து 52 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2024-25 ஆம் நிதியாண்டில் 22 விவசாயிகளுக்கு ரூ.49.50 இலட்சம் மானியத்தில் சூரிய ஒளியால் இயங்கும் பம்பு செட்டுகள், சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் 44 விவசாயிகளுக்கு ரூ.0.92 இலட்சம் மானியத்திலும், பழைய மின்மோட்டார் மாற்றி புதிய மின் மோட்டார் பொறுத்துவதற்கு மானியமாக ரூ.1.35 இலட்சம் மற்றும் SMAM திட்டத்தின் கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ8.76 இலட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் என மொத்தம் ரூ.60 இலட்சத்து 53 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இன்று வேளாண் பொறியில் துறை அலுவலக வளாகத்தில் வேளாண்
இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரித்தல், செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை, பழுதுகளை கண்டறிதல், உதிரி பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றம் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவுரை வழங்கப்பட்டது. வேளாண்மை பொறியியல் துறையின் இயந்திரங்களான தென்னை மட்டை துகளாக்கும் கருவி, தேங்காய் பறிக்கும் இயந்திரம், DRONE (டிரோன்) மூலம் மருந்து தெளிப்பு, சூரிய கூடார உலர்த்தி, சூரிய ஒளியால் இயங்கும் பம்புசெட் மற்றும் சூரிய மின்வேலி பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தனியார் இயந்திர நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் உழுவை இயந்திரங்களுக்கு பராமரிப்பு செய்வது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, மூங்கில்புதூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்
மூலம் மகளிர் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் “நமோ ட்ரோன் தீதி” திட்டத்தின் கீழ்
குறைந்த செலவில் ட்ரோன் தெளிப்பான் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் செய்து
காண்பிக்கப்பட்டது. ட்ரோன் தெளிப்பானின் நன்மைகள், செயல்முறைகள் குறித்து விளக்கம்
அளிக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு இந்த ட்ரோன்
தெளிப்பானினை குறைந்த வாடகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் விவசாயத்தில்
ஏற்படும் செலவினங்களை குறைக்கலாம்.
எனவே, விவசாய பெருமக்கள் வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
வேளாண்மை பொறியியல் துறை சார்பாக மானிய விலையில் டிராக்டர் பெற்ற ஊத்தங்கரை வட்டம் நாயக்கனூர் கிராமத்தை விவசாயி திரு.சம்பத், த/பெ. வஜ்ரம்(செல்:9976928992)
முழுநேர விவசாயி ஆகிய நான் நாயக்கனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 2.50 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. எனது தோட்டத்தில் கிணறு மற்றும் ஆழ்துணறு மூலம் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் உள்ளது. எனது நிலத்தில் நெல், ராகி உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்து வருகிறேன். இந்நிலையில் டிராக்டர் மூலம் 2.50 ஏக்கர் நிலம் உழவு மற்றும் பயிர் நடவு செய்யும் வரை 1 மணி நேரத்திற்கு ரூ.1000 என்ற நிலையில் ரூ.7000 முதல் ரூ.10,000 செலவாகிறது. இந்நிலையில் நான் தமிழ்நாடு அரசு மூலம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானிய நிலையில் டிராக்டர் பெற விண்ணப்பித்து இருந்தேன். தற்போது எனக்கு ரூ.5 இலட்சம் மானியத்தில் டிராக்டர் பெற்றுள்ளேன். நானே டிராக்டரை ஓட்டுவதால் எனக்கு உழவு சார்ந்த செலவு மீதமாகிறது. என்ன போன்ற சிறு குறு விவாசயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வேளாண்மை பொறியியல் துறை சார்பாக மானிய விலையில் சேலார் பம்ப்செட்டு அமைத்துள்ள பர்கூர் வட்டம் ஐகுந்தம் கிராமத்தை விவசாயி திரு.கோவிந்தராஜ், த/பெ.பச்சையப்பன், (:9787116794).
நான் ஐகுந்தம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 1ஏக்கர் 20 சென்ட்
நிலம் உள்ளது. மேட்டு நிலமாக மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வந்தேன். மேலும் உழவு
செலவு, கூலி ஆட்கள் செலவு எனக்கு எந்த பயனும் இல்லாத நிலை இருந்து. எனது நிலத்தில்
ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து இருந்தேன். இந்நிலையில்
வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் சோலார் பம்ப்செட் அமைக்க எனக்கு அறிவுரை
வழங்கினார்கள். அதன்படி நான் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். தற்போது எனக்கு
கடந்த மாதம் ரூ.2 இலட்சத்து 78 ஆயிரம் 464 மானியத்தில் சோலார் மின் பம்ப்செட் வேளாண்
பொறியியல் துறை சார்பாக அமைத்து கொடுத்துள்ளார்கள். நான் ஏற்கனவே நிலகடலை
பயிரிட்டுள்ளேன். தொடர்ந்து நெல், ராகி பயிரிட உள்ளேன். மழையை நம்பி மட்டுமே விவசாயம்
செய்து வந்த நான் நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யும் முழுநேர விவசாயியாக மாறி
உள்ளேன். இவ்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.