சென்னை, அக்டோபர் -06, உலக விண்வெளி வாரத்தை நினைவு கூறும் வகையில், இலங்கையின் நார்தர்ன் யூனி விண்வெளிக் கல்வியில் , மாணவர்கள் தலைமையிலான கூட்டு செயற்கைக்கோள் திட்டத்தைத் தொடங்குவதற்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நார்தர்ன் யூனி கையெழுத்திட்டது.
இந்நிகழ்ச்சியில் அகமதாபாத் இன்ஸ்பேஸ் இயக்குநர் டாக்டர் பிரபுல்ல குமார் ஜெயின், நார்தர்ன் ஃயூனியின் தலைவர் இண்டி பத்மநாதன், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீமதி கேசன், குழந்தைகள் கல்வி உளவியலாளார் சரண்யா ஜெய்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்வில் நார்தர்ன் யூனி தலைவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த இண்டி பத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முயற்சியானது விஞ்ஞான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும்
முன்னெடுக்கும் .
நார்தன் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களையும், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களையும் ஒன்றிணைத்து, செயற்கைக்கோளை வடிவமைத்து, உருவாக்கி, விண்ணில் செலுத்தும். இந்த செயற்கைக்கோள் விண்வெளி வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்கும் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் வகையில் அதிநவீன கருவிகளை கொண்டு செல்லும்.
நார்தர்ன் யூனியால் வழிநடத்தப்படும் இந்த கூட்டு முயற்சியானது இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் கண்டுபிடிப்பாளர்களின் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் என்று கூறினார்.