வேலூர்_25
வேலூர்மாவட்டம்,வேலூரில் புதியதாக புதிய கட்டிடத்தில் அகர்வால் கண் மருத்துவமனையின் திறப்பு விழாவானது பிராந்திய தலைவர் ஐசக் அப்ரஹாம் மற்றும் மருத்துவர் ரம்யா சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த கண் மருத்துவமனையை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இம்மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுனர்கள் 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அதி நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனையானது திறக்கப்பட்டுள்ளது
இது குறித்து கண் மருத்துவர் ரம்யா சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில் உயர் தர மருத்துவ சேவையை வழங்குகிறோம் பார்வைத்திறன் அளவீட்டாளர்கள் மருந்தாளுநர்கள் ஆய்வாக பணியாலர்களுடன் அதிக நவீன வேறு எங்கும் இல்லாத கண் அறுவை சிகிச்சை முறையும் அதற்குரிய கருவியும் இங்குள்ளது காலையில் கண் அறுவை சிகிச்சை செய்தால் மாலையில் வீடு திரும்பலாம் மேலும் கண் பராமரிப்பு குறித்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் கண் பராமரிப்பு குறித்து மக்களுக்கு விளக்கி கூறுவோம் இதன் மூலம் வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,திருவண்ணாமலை 4 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் மேலும் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் மக்கள் இங்கு இலவசமாக கண் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று கூறினார்