பரமக்குடி,நவ.26: ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி சார்பாக பரமக்குடி கிழக்கு ஒன்றியம் இளைஞரணி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பாக பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இளைஞர் அணி சார்பாக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இளைஞர் அணி பாக முகவர்கள் கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்கள். ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சண்.சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்து இளைஞர் அணி நிர்வாகிகளிடம் கூறுகையில் ” வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்திட இளைஞர் அணி பாக முகவர்களை ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் திருத்தம் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், இளைஞர் அணி பொறுப்பாளர் பிரபாகரன், ஜெயமுருகன், குரு பாலமுருகன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பாம்பூர் வேலுச்சாமி உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில், தொழில்நுட்ப அணியின் பரமக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.