இந்தியாவின் இரும்பு பெண்மணி ஜெயலலிதா
ஒன்றிய செயலாளர் ஜெஸீம் பிறந்த நாள் வாழ்த்து
அஞ்சுகிராமம் பிப்-22
ஆகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அஞ்சை ஜெஸீம் வெளியீட்டுள்ள அறிக்கையில்
பாரதி கண்ட புதுமை பெண்ணுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் போது ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். அவர் வாழ்க்கை பயணம் தென்றல் மனம் கமழும் பூஞ்சோலை அல்ல. மேடுகளும் பள்ளத்தாக்குகளுமான பாதைகளையே கடந்து வந்திருக்கிறார்.
பல இயற்கை சீற்றங்கள் அவரது வாழ்க்கை பாதையில் குறிப்பிட்டது அந்த சீற்றங்களை எல்லாம் இயக்கங்களாக மாற்றி காட்டி சாதனைகளை படைத்தார். உலகத்திலேயே எந்த பெண்ணுக்குமே நேர்ந்திடாத சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி எவரெஸ்ட் சிகரம் போல் எழுந்து நின்றார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தலைவர். அவர் நன்றாக யோசித்து முடிவுகளை எடுப்பார். முடிவு எடுத்தபின் அதிலிருந்து பின்வங்க மாட்டார். அன்பு அறிவு துணைவு என்கிற ஆயுதங்களை கொண்டு இந்திய அரசியலில் மனோதிடம் மிக்க தலைவராக திகழ்ந்தார். அதனால் தான் மகத்தான மக்கள் சக்தி அவருக்குப்பின் அணிவகுப்பு நின்றது. இந்தியாவிலேயே ஜாதி, மதம், இனம், மொழி பேதமற்ற மகத்தான மக்கள் சக்தியை பெற்ற மாபெரும் தலைவி அவர்தான்.
அவருடைய நினைவாற்றலும் மொழி புலமையும் நுட்பமான அறிவும் எதிர்கால கணிப்பும் கடுமையான உழைப்பும் கண்டு தான் தமிழக முதல்வர் பொறுப்பை மக்கள் அளித்தார்கள். எனக்குப் பின்னாலும் நூற்றாண்டு காலம் சேவை செய்யும் என்ற அவரது ஆசையும் கனவும் நிறைவேற கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரங்களை வலுப்படுத்துவோம்.
தொட்டில் குழுந்தை திட்டம். தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா. ஆஸ்பத்திரி என அரசின் திட்டங்கள் இவ்வையகம் உள்ளவரை அவர் புகழ் ஓங்கும். குமரி மாவட்டத்தில் அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட.செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வழிகாட்டுதலின்படி ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் கைபற்றி மீண்டும் 2020-ல் அதிமுக ஆட்சி அமைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் சூளுரைப்போம் எனக் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தொழிலதிபர் அஞ்சை ஜெஸீம்
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.