அஞ்சுகிராமம் அக் 1
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் வட்டார தலைவர் தங்கம் நடேசன் தலைமையில் நடந்தது.
வட்டார துணைத் தலைவர் பெரியசாமி,பொருளாளர் நாகராஜன்,பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்கள் ஆண்ட்ரூஸ், நடேசன், ஹெலன், பென்னி, மோசஸ்.,ரவி ஐயப்பன் ,ரமேஷ், ரத்தின பாண்டியன்,ராஜா, ராஜா சிங், மயிலாடி நகர செயலாளர் சுடலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காந்தி பிறந்த நாள்,காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குளச்சலில் நடைபெறும் நடை பயணத்திற்கு பெரும்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் , 5தேதி மயிலாடியில் இருந்து வழுக்கம்பாறை வரை நடைபெறும் நடை பயணத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.