தென்தாமரைகுளம், அக்.13:
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்கு
உட்பட்ட பாலசவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரிவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசிநாளான விஜயதசமியை முன்னிட்டு நேற்று காலை 7. 45 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.8.15 மணிக்கு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம்
நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த
ஏடு துவங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தோட்டக்கலை பணிநிறைவு பேராசிரியர் முனைவர். தி. தங்க செல்வபாய் தொடங்கி வைத்தார். ஆசிரியை ரேணுகா ராமச்சந்திரன்
முன்னிலை வகித்தார். சுமார் 20 குழந்தைகள் கலந்து
கொண்டனர். 9 மணிக்கு பஜனையும் 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் பேராசிரியர் கருணாகரன், ராஜசுந்தரபாண்
டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.