கீழக்கரை,ஜூன்.07 ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கான சிறப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மற்றும் மாத்திரைகள் பற்றக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ஒரு மாத விழாவாக நடைபெறும். திருவிழாவிற்கு வெளி மாநிலம் மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தர்ஹாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கி பிரத்தனை செய்பவர்களின் உடல் உபாதைகள் ஏற்படும் போது மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
திருவிழாவிற்கு தேவையாக பணிகளை மேற்கொள்ள ஏர்வாடி ஊராட்சி மன்றம் சார்பில் ஒரு மாத்திற்கு மட்டும் சுங்க சாவடி அமைத்து அதில் வரும் வருவாய் கொண்டு தூய்மை பணி, சுகாதாரப்பணி,குடிநீர், உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ளுவது வழக்கம். இதற்காக தர்ஹா கமிட்டி சார்பில் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடி மூலம் 13 லட்சம் என ஊராட்சிக்கு 15 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஊராட்சி நிர்வாகம் திருவிழாவிற்கான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் தர்ஹா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரையில் பற்றக்குறையால் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மருத்துவ வசதிகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த பணியை மாவட்ட நிர்வாகம் முழமையாக மேற்கொள்ள வேண்டும் என ஏர்வாடி தர்ஹா நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.