தென்காசி அடுத்த இலத்தூர் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளியான் தட்டு விளையாட்டு, ’அட்யா பட்யா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கோ-கோ மற்றும் கபடி கலந்த இந்த விளையாட்டை மாணவ, மாணவிகள் ஆர்வமாக விளையாடி வருகின்ற நிலையில் இந்த விளையாட்டில் சர்வதேச அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு அட்யா பட்யா அசோசியேஷன் சார்பில் 3 வது நடுவர் பயிற்சி முகாம் தென்காசி அடுத்த இலத்தூர் ஸ்ரீ ராம் வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தென்காசி மாவட்ட தலைவர் சாந்தசீலன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட துணை செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் குத்தால பெருமாள் வரவேற்புரையாற்றினார், நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வகுமார், தென்காசி நகர்மன்ற அதிமுக உறுப்பினர் உமாமகேஸ்வரன் துவக்கி வைத்தனர், பயிற்சி முகாமிற்கு அட்யா பட்யா மாநில தலைவர் பாலாஜி, மாநில செயலாளர் சிவசுப்பிரமணியன், துணை தலைவர் ஜெயராஜ், கெளரவ துணை தலைவர் முத்துகுமரன், இணை செயலாளர்கள் இசக்கி, செந்தாமரைகண்ணன், கெளரவ இணை செயலாளர் ஸ்ரீலட்சுமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் சர்வேஸ்வரன், ஷைனி ஆகியோர் சென்னை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி, திருநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 100 புதிய மற்றும் பழைய நடுவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி தேர்வு செய்தனர் அதன் பின்னர் தேர்ச்சி பெற்ற நடுவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களான தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர் சாதிர், திருநெல்வேலி லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் அண்டஜோ செல்வகுமார், சான்றிதழ் வழங்கினர். தென்காசி நகர திமுக பொருளாளர் பரீத், நகர்மன்ற உறுப்பினர் மைதீன், மலையான் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் இசக்கிரவி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக பேசிய அட்யா பட்யா அசோசியேஷன் மாவட்ட செயலாளர் வைரமுத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கும் சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.