கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாருதி மகாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாவட்டத் தலைவர் முரளி விஜய் பங்கேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் குறிப்பாக
வெற்றிக் கழக தலைவரின் ஆணைக்கிணங்க
2 கோடி உறுப்பினர்களை நியமிக்க அனைவரும் அயராது உழைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்
தலைவர் நடித்த கோட் திரைப்படம் வெளியாகும் பொழுது அதன் வெற்றி விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் இதுவரையிலும் ரசிகர் மன்றமாக இருந்த நமது இயக்கம் தற்பொழுது அரசியல் கட்சியாக மாறி உள்ள நிலையில் இந்தப் படத்தை நாம் அரசியல் நாகரிகத்துடன் அணுகுமுறைகள் குறித்தும்
நடைபெற உள்ள மாநாடு வெற்றி மாநாடாக மாற்ற எவ்வாறு தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் மாநாடு திடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்த நிகழ்வில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் சிங்காரப்பேட்டை ஊத்தங்கரை கல்லாவி காரப்பட்டு ராமகிருஷ்ணபதியை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சுகுமார் ரமேஷ் ஜெயசூர்யா மணிகண்டன் சத்யராஜ் சீனிவாசன் ஹரிபிரசாத் தொண்டரணி கோகுல் சந்தோஷ் விக்னேஷ் சிலம்பரசன் மணிகண்டன் சிவா கோபால் தமிழ் கார்த்திக் தாமரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்